அ.தி.மு.க பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 16 தீர்மானங்கள்

பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
x
சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில், அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில், கூட்டம் துவங்கியது. ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, மூத்த மற்றும் முக்கிய நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் இதில் பங்கேற்றனர். கூட்டம் நடைபெற உள்ள மண்டப நுழைவுவாயிலில் கரும்பு, வாழைக்கன்று மற்றும் பழங்கள் கொண்டு அமைக்கப்பட்டிருந்த பிரமாண்ட அலங்கார வளைவு அவ்வழியாக சென்றவர்களின் கண்களை கவர்ந்தது.

சட்டமன்ற தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு முடிவு செய்வதில் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என்பதை ஏகமனதாக ஏற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  7.5% உள் ஒதுக்கீட்டில், தனியார் மருத்துவ கல்லூரியில் சேரும் அரசு பள்ளி மாணவர்களுக்கான கல்வி செலவை ஏற்றது,  நிவர், புரெவி புயல்களால் பாதித்த விவசாயிகளுக்கு ரூ.600 கோடி இடுபொருள் நிவாரணம் வழங்கியதற்காக தமிழக அரசை பாராட்டி தீர்மானம் போடப்பட்டுள்ளது.  கொரோனா தடுப்பூசி இலவசம் என அறிவித்த முதலமைச்சர், மத்திய அரசுக்கு நன்றி,  நகர்புற வீட்டு வசதி திட்டம் - தமிழகத்தை இணைத்த பிரதமருக்கு நன்றி, அரசு வேலைவாய்ப்பில் தமிழ்வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளித்ததற்கு நன்றி கூறி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  இலங்கையில், மாகாண கவுன்சில் முறை ரத்து செய்யப்படுவதை இந்திய அரசு தடுக்க வேண்டும், அ.தி.மு.க அரசை தொடர்ந்து விமர்சித்து வரும் தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவிப்பது,ஜெயலலிதா நினைவிடத்தை உருவாக்கும் தமிழக அரசுக்கு நன்றி சொல்வது உள்பட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 

இதை தவிர, அ.தி.மு.க-வில் 16 ஏ என கூடுதலாக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில், கட்சியை வலுப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட 6 அமைச்சர்கள் உள்பட 11 பேர் அடங்கிய குழுவுக்கு அங்கீகாரம் மற்றும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 



Next Story

மேலும் செய்திகள்