சட்டப்பேரவை தொடர் தள்ளிப் போக வாய்ப்பு - பொங்கலுக்கு பிறகு பேரவை கூட்டம்?
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தள்ளி போக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதிய ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் துவங்குவது வழக்கம். அந்த வகையில் ஜனவரி 4 ஆம் தேதி சட்டப்பேரவை ஆளுநர் உரையுடன் துவங்கும் என தகவல் வெளியானது. இந்நிலையில் ஆளுநர் தரப்பில் இருந்து எவ்வித தகவலும் வராத காரணத்தால் சட்டப்பேரவை கூடும் நாள் தள்ளி போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு பின்னரே சட்டப்பேரவை கூடும் என சட்டப்பேரவை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இறுதியாக கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்தது. அதன்படி அடுத்த கூட்டத்தொடர் கூட்ட மார்ச் மாதம் வரை கால அவகாசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story