"திருவள்ளுவருக்கு காவி சாயம்" - தி.மு.க. கண்டனம்

கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில், திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசப்பட்ட படம் வெளியானதற்கு, திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
திருவள்ளுவருக்கு காவி சாயம் - தி.மு.க. கண்டனம்
x
இது தொடர்பாக முன்னாள் பள்ளிக் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கல்வி தொலைக்காட்சி வழியாக ஒளிபரப்பப்படும் ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில், திருக்குறளை மேற்கோள் காட்டி, ஆசிரியர் விளக்கும் காட்சி ஒளிபரப்பானதாக தெரிவித்துள்ளார். அதில், திருவள்ளுவரின் உடை காவி நிறத்தில் இடம்பெற்றிருப்பதாக கூறியுள்ளார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தங்கம் தென்னரசு, தமிழக பண்பாட்டை தொடர்ந்து மத்திய அரசிடம் அடகு வைக்கும் செயலை தமிழக அரசு செய்து வருவதாக கூறியுள்ளார். கல்வியில் காவி சாயம் பூசும்பணி நடைபெற்று வருகின்றன என்றும் தெரிவித்துள்ள அவர், இதுபோன்ற செயலுக்கு அரசின் கல்வி தொலைக்காட்சியை பயன்படுத்தி இருப்பது கண்டனத்திற்குரியது என்றும் கூறியுள்ளார். தவறு செய்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தங்கம் தென்னரசு வலியுறுத்தியுள்ளார். இதனிடேயே, மாவட்டங்களில் ஆசிரியர்கள் சிலர் செய்த தவறு காரணமாக நடந்து வந்துவிட்டதாக கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்