தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை - "ஜனவரி 8-க்குள் விண்ணப்பத்தை அளிக்க வேண்டும்" - தேர்வுத்துறை

அரசு பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை - ஜனவரி 8-க்குள் விண்ணப்பத்தை அளிக்க வேண்டும் - தேர்வுத்துறை
x
ஆண்டிற்கு ஒன்றரை இலட்சம் ரூபாய் வருமானம் பெறக்கூடிய பெற்றோர்களின் குழந்தைகள் , இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  www.dge.tn.gov.in  என்ற தேர்வு துறை இணையதளத்தில் இருந்து வரும் 28 ந்தேதி முதல் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து வரும் ஜனவரி 8ஆம் தேதிக்குள் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களிடமே விண்ணப்பங்களை ஒப்படைக்க வேண்டும் என தேர்வுத்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டி தேர்வு வரும் பிப்ரவரி 21ஆம் தேதி, இரண்டு தாள்களாக நடைபெறும் என்றும், தேர்வில் தேர்ச்சி பெற்று தகுதி பெறும் மாணவர்களுக்கு ஒன்பதாம் வகுப்பு முதல்,  பன்னிரண்டாம் வகுப்பு வரை ஆண்டிற்கு 12 ஆயிரம் ரூபாய் கல்வி உதவி தொகை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்