ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை - 4 வாரங்களுக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு
ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு தடை கோரிய வழக்கை உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்தது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. இந்த ஆணையத்தில் மருத்துவ நிபுணர்கள் இல்லாததால், இதில் ஆஜராகி விளக்கம் அளிக்க முடியாது எனக்கூறி, இந்த ஆணையத்தின் விசாரணைக்கு தடைகோரி அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனு, நீதிபதிகள் அப்துல் நசீர், சஞ்சீவ் கண்ணா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை விரிவாக விசாரிக்க வேண்டும் எனக் கூறிய நீதிபதிகள், அரசியல் சாசன அமர்வில் வேறு வழக்குகளை விசாரிக்க உள்ளதாக தெரிவித்து, வழக்கை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
Next Story