மாமல்லபுரத்ததை அழகுபடுத்து தொடர்பான வழக்கு விசாரணை - எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
மாமல்லபுரத்ததை அழகுபடுத்துவதற்கு மட்டும் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது என்பதை குறிப்பிட்டு தெரிவிக்காவிட்டால், சம்பந்தப்பட்ட மத்திய, மாநில அரசு செயலர்கள் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்கள், கடற்கரை சிற்பங்களை பாதுகாத்து அழகுபடுத்துவது தொடர்பாக நீதிபதி கிருபாகரன் எழுதிய கடிதத்தின் சாராம்சத்தை கொண்டு, சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக விசாரித்து வருகிறது. நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் அடங்கிய அமர்வு, இதுதொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைத்து, விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுக்கு உத்தரவிட்டது. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மாமல்லபுரம் போன்று முக்கியமான 16 சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த 5 ஆயிரத்து 109 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது என தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், மாமல்லபுரத்திற்கு மட்டும் எவ்வளவு நிதி என்பதை குறிப்பிட்டு சொல்ல வேண்டும், இல்லை என்றால் சம்பந்தப்பட்ட செயலாளரை நேரில் ஆஜராக உத்தரவிட வேண்டி வரும் என்று எச்சரித்தனர். தொடர்ந்து வழக்கு விசாரணையை நீதிபதிகள், டிசம்பர் 4-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Next Story