வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு - டிசம்பர் 1-ந் தேதி முதல் தொடர் போராட்டம்
வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்க கோரி வரும் டிசம்பர் 1-ஆம் தேதி தேதி முதல், தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் கூட்டு பொதுக்குழு கூட்டம் மற்றும் இணையவழி கலந்தாய்வு இன்று நடைபெற்றது. அப்போது தமிழக அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு கோரிக்கை உள்ளிட்ட 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு கோரி வரும் டிசம்பர் 1 ந்தேதி முதல் முதற்கட்ட தொடர் போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. டிசம்பர் 31-ந்தேதி வரை அனைத்து பணி நாட்களிலும் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் வரும் ஜனவரி மாத பிற்பாதியில் தமிழகம் தழுவிய அளவில் மிகப்பெரிய அறப்போராட்டத்தை நடத்துவதென்றும் பாமக -வன்னியர் சங்கம் கூட்டு பொதுக்குழு கூட்டம் மற்றும் இணைய வழி கலந்தாய்வில் முடிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story