"6 ஆண்டுகளில் தமிழகத்திற்கு பாஜக செய்தது என்ன?" - அமித்ஷாவுக்கு டி.ஆர்.பாலு கேள்வி

இந்தி திணிப்பு, தமிழக வருவாய் பறிப்பு தவிர, 6 ஆண்டுகளில் தமிழகத்திற்கு பாஜக செய்தது என்ன என்று, திமுக பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பியுள்ளார்.
6 ஆண்டுகளில் தமிழகத்திற்கு பாஜக செய்தது என்ன? - அமித்ஷாவுக்கு டி.ஆர்.பாலு கேள்வி
x
நேற்று சென்னை வந்திருந்த அமித்ஷா, மத்திய அரசில் இருந்த போது தமிழகத்திற்குக் தி.மு.க. கொண்டு வந்த திட்டங்கள் என்ன என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து, டி.ஆர்.பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்தது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் திமுக இருந்த காலத்தில் தான் என அவர் தெரிவித்துள்ளார். 
சென்னைக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வந்தது திமுக தான் என கூறியுள்ள டி.ஆர்.பாலு,காவிரி நடுவர் மன்றம், விவசாயிகளின் 72 ஆயிரம் கோடி கடனை தள்ளுபடி செய்தது ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் திமுக அங்கம் வகித்த காலத்தில் தான் என தெரிவித்துள்ளார். ஆனால், மத்திய பா.ஜ.க. அரசு - அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து தமிழ்நாட்டிற்குச் செய்தது என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ள அவர்,
ஹைட்ரோ கார்பன் திட்டம், இந்தித் திணிப்பு, ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட துரோகங்களையே செய்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்..
மேலும், ஜி.எஸ்.டி. மூலம் இதுவரை தமிழகத்தில் இருந்து கிடைத்த நிதி எவ்வளவு? என்றும், அதில் தமிழ்நாட்டிற்கு செலவிட்டது எத்தனை கோடி? எனவும் டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பியுள்ளார்..



Next Story

மேலும் செய்திகள்