நவ.25 முதல் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு அனுமதி"- தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் வரும் 25ஆம் தேதி முதல் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த நிகழ்ச்சிகளில் 200 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் எனவும், முகக் கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா தடுப்பு விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே அரசியல் மற்றும் மத நிகழ்ச்சிகளுக்கான தடை தொடரும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
Next Story