"8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு"
தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில்
கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
அதன்படி, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யும் என்றும், கடலூர், திருவாரூர், நாகை மற்றும் காரைக்கால் மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இடைவெளி விட்டு மிதமான மழை பெய்யும் என்றும், வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
Next Story