சார்ஜாவில் இருந்து விமானத்தில் தங்கம் கடத்தல் - கோவை விமான நிலையத்தில் கலால்துறை சோதனை
சார்ஜாவில் இருந்து கோவைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 1.09 கோடி ரூபாய் மதிப்புடையை தங்கத்தை கலால் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சார்ஜாவில் இருந்து கோவை வந்த ஏர்அரேபியா விமானத்தில் வந்த பயணிகளை கலால் துறை அதிகாரிகள் வழக்கமான சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது சந்தேகத்திற்கு இடமான இரு பயணிகளை சோதனையிட்ட போது தங்கம் சிக்கியுள்ளது. அவர்கள் இருவரும் தங்கத்தை பேஸ்ட் வடிவில் மாற்றி இடுப்பில் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிகப்பட்டு உள்ளது. இதனையடுத்து அவர்களிடம் இருந்து 62 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய 1 புள்ளி 2 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் சென்றனர். மேலும், இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதே விமானத்தில் 5 பயணிகள் வரி செலுத்தி விட்டு கொண்டு வந்த தங்க நகைகள் சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்துள்ளது. இதனையடுத்து அவர்களிடம் இருந்து 46 லட்ச ரூபாய் மதிப்புடைய தங்க நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரித்தனர். கோவை விமான நிலையத்தில் ஓரே நாளில் 1.09 கோடி மதிப்புடைய தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Next Story