துணை அதிபராகும் கமலா ஹாரிஸ் - பூர்வீக கிராமத்தில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
மன்னார்குடி அருகே உள்ள கமலா ஹாரிஸின் பூர்வீக கிராமத்தில் கொண்டாட்டம் களைகட்டியது.
தங்கள் கிராமத்திற்கு கமலா ஹாரிஸ் வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அமெரிக்க துணை அதிபராக வெற்றி பெற்றுள்ள கமலா ஹாரிஸின், தாய் ஷியாமளா கோபாலன் தமிழகத்தைச் சேர்ந்தவர்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள துளசேந்திரபுரம் கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர். கமலா ஹாரிஸ், துணை அதிபராக வெற்றி பெற்றதை துளசேந்திர கிராம மக்கள் பட்டாசு வெடித்து, பல வண்ணங்களில் கோலமிட்டு கொண்டாடி மகிழ்ந்தனர். மேலும் ஒருவருக்கு ஒருவர் இனிப்புகளை வழங்கி வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர். அமெரிக்காவின் முதப் பெண் துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்க உள்ளது தங்களுக்கு மிகவும் பெருமையாக உள்ளதாக துளசேந்திர பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். தனது பூர்வீக கிராமத்திற்கு கமலா ஹாரிஸ் வர வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story