"பள்ளிக் கல்வித்துறையின் அதிக வழக்குகள் நிலுவையில் உள்ளன" - ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு கடும் எச்சரிக்கை

கல்வித்துறை வழக்குகளில், திட்டமிட்டே பதில்மனு தாக்கல் செய்யாத அதிகாரிகளே செலவினங்களை ஏற்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அதிரடியாக கூறியுள்ளது.
பள்ளிக் கல்வித்துறையின் அதிக வழக்குகள் நிலுவையில் உள்ளன - ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு கடும் எச்சரிக்கை
x
ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் என 4 லட்சம் பேர் பணியாற்றும் மிகப்பெரிய பள்ளிக் கல்வித்துறை சார்ந்த பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதற்கு, உரிய பதில் மனுக்களை உரிய நேரத்தில், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அளிக்காததே காரணம் என குற்றம்சாட்டியுள்ள பள்ளிக் கல்வித்துறை, திட்டமிட்டே அதிகாரிகள் காலதாமதம் செய்வதாக கூறியுள்ளது. இதே நிலை நீடித்தால், அரசுக்கு ஏற்படும் நிதி இழப்பை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்க வேண்டுமென சுற்றறிக்கை அனுப்பியுள்ள பள்ளிக் கல்வித்துறை, பதில்மனு தாக்கல் செய்யாததால், ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு கூடுதல் தொகை வழங்க வேண்டி உள்ளதாகவும், வழக்கு செலவு, அரசுக்கு தேவையற்ற நிதி இழப்பு ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளது. தேவையற்ற செலவினத்தை சம்பந்தப் பட்டவர்களே ஏற்க வேண்டும் என்றும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோர் முழு பொறுப்பேற்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்