"வேல் யாத்திரைக்கு தடை கூடாது" - உயர்நீதிமன்றத்தில், பாஜக மனு தாக்கல்

நாளை முதல் துவங்க உள்ள வேல் யாத்திரையை தடுக்கக் கூடாது என அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழக பா.ஜ.க. சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வேல் யாத்திரைக்கு தடை கூடாது - உயர்நீதிமன்றத்தில், பாஜக மனு தாக்கல்
x
தமிழக பா.ஜ.க. பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் தாக்கல் செய்த மனுவில்,  மத்திய அரசின் வழிகாட்டுதல்களை மீறி, தமிழக அரசு, அரசாணை பிறப்பித்துள்ளதாகவும், வேல் யாத்திரை சுமூகமாக செல்ல ஏதுவாக அனைத்து மாவட்ட காவல் துறை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல்களை வழங்க தமிழக தலைமைச் செயலாளருக்கும், டிஜிபி க்கும் உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வில் இன்று அவசர வழக்காக விசாரணைக்கு வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்