கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட உயர்நீதிமன்ற வழக்கறிஞர் - போலீசார் சோதனையில் கையும், களவுமாக சிக்கினார்
சென்னையில், இருசக்கர வாகனத்தில் வழக்கறிஞர் உடையுடன் வந்து கஞ்சா விற்றவரை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
சென்னை எம்.கே. பி. நகரில் இரண்டு வியாபாரிகள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவது மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், கஞ்சா வியாபாரிகளிடம், கஞ்சா வாங்குபவர் போல போலீசார் பேசியுள்ளனர். இதனை நம்பிய வியாபாரிகள் 2 கிலோ கஞ்சாவுடன், வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி அருகே, இருசக்கர வாகனத்தில் வந்த போது போலீசார், கையும் களவுமாக பிடித்தனர். அவர்களிடம் இருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், நடத்திய விசாரணையில் அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகின. விசாரணையில் கஞ்சா விற்பனை செய்ய வந்தவர் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சரவணன் என்றும், மற்றும் அவரது நண்பர் நூர் முகமது என்பது தெரிய வந்துள்ளது. உடனடியாக இருவரையும்
மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினர் கைது செய்து எம்.கே.பி நகர் போலீசாரிடம், ஒப்படைத்தனர்.கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து இரண்டு இருசக்கர வாகனங்கள் 2 கிலோ கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. சென்னையில் வழக்கறிஞரே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Next Story