தி.மு.க. எம்.எல்.ஏ. ரங்கநாதன் தொடர்ந்த வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

70 ஆண்டுகள் பழமையான பள்ளியின் நிலத்தை வணிக பயன்பாட்டிற்காக விற்பதை எதிர்த்து திமுக எம்.எல்.ஏ. ரங்கநாதன் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தி.மு.க. எம்.எல்.ஏ. ரங்கநாதன் தொடர்ந்த வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
x
 சென்னை வில்லிவாக்கத்தில்  சிங்காரம் பிள்ளை பள்ளி அறக்கட்டளைக்கு விற்பனை செய்யப்பட்ட நிலத்தில் பள்ளிகள் இயங்கி வரும் நிலையில்,  கல்வி பயன்பாட்டிற்காக விற்கப்பட்ட அந்த நிலத்தை, பள்ளியின் செயலாளர்,  தனி நபர்களுக்கு விற்பதாக ரங்கநாதன் வழக்கு தொடர்ந்தார்.  இதை விசாரித்த நீதிபதிகள் 4 வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசு, பள்ளி கல்வி துறை, பள்ளி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டனர். 


Next Story

மேலும் செய்திகள்