ஜவுளிப்பூங்கா - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆலோசனை
நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஜவுளிப்பூங்கா அமைப்பது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆலோசனை மேற்கொண்டார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஜவுளிப்பூங்கா அமைப்பது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில் அதிகாரிகள், திருப்பூர் ஏற்றமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர். ஜவுளிப்பூங்கா அமைப்பதற்கான இடம் அய்யக்காரன்புலம் 4 ஆம் சேத்தி கிராமத்தில் 114 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு முதற்கட்டமாக 36 ஏக்கஎ நிலம் பயன்படுத்தப்பட உள்ளது. அங்கு அமைக்கப்படவுள்ள பூங்காவில் 94 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 36 தொழிற்சாலைகள் அமைப்பதற்கான விரிவான செயல்திட்ட அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டத்தின் கீழ் 4 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த ஜவுளிப்பூங்கா மார்ச் 2021ஆம் ஆண்டு செயல்பாட்டிற்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story