வரைவு வாக்காளர் பட்டியல் - அரசியல் கட்சிகளுடன் நாளை தமிழக தேர்தல் அதிகாரி ஆலோசனை
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பாக, அங்கரீக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தமிழக தேர்தல் அதிகாரி நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.
நவம்பர் 16-ம் தேதி ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. 2021 ஜனவரி 20-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவதற்கு முன் வழக்கமாக அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வது, இரட்டை பதிவுகளை நீக்குவது, வாக்குச்சாவடி முகவர்களுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்துவது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் தொடர்பான சிறப்பு முகாம் நடத்துவது குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story