ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் - ராமதாஸ்
ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையாகி தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாகி வருவது மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையாகி தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாகி வருவது மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சூதாட்டத்தால் இறந்தவரின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள அவர், அது ஒரு மாய வலை எனக் குறிப்பிட்டுள்ளார். ஆன்லைன் சூதாட்டத்தில் அடிமையானவர்கள் அதிலிருந்து மீளவே முடியாது என்றும், தங்களின் பணம் முழுவதையும் இழந்து கடன் வாங்கியும் சீரழிவதை தவிர்க்கவே முடியாது என்றும் கூறியுள்ளார். பொது இடங்களிலோ, மன்றங்களிலோ விளையாடினால் குற்றமான சூதாட்டம், ஆன்லைனில் குற்றமாக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ள ராமதாஸ், இதனை தடைசெய்ய மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுத வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
Next Story