"சென்னை புறநகர் மின்சார ரயில் சேவைக்கு அனுமதி வழங்குக" - ரயில்வேதுறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு முதலமைச்சர் கடிதம்
சென்னையில் புறநகர் மின்சார ரயில் சேவைக்கு அனுமதி வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்ட ரயில் சேவைகள் படிப்படியாக மீண்டும் தொடங்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் சென்னையில் புறநகர் மின்சார ரயில் சேவை மட்டும் இன்னும் தொடங்கப்படவில்லை. இதனால் தினமும், சென்னைக்கு பணி நிமித்தமாக வரும் அண்டை மாவட்ட மக்கள், பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக ரயில்வே துறை அமைச்சர், பியூஷ் கோயலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், மக்களுக்காகவும், பொருளாதாரம் மீண்டெழவும், சென்னை புறநகர் ரயில் சேவைக்கு அனுமதி வழங்க வேண்டும் என முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். புறநகர் ரயில் சேவையை தொடங்க வேண்டும் என ஏற்கனவே செப்டம்பர் 2ஆம் தேதி விடுத்த கோரிக்கையையும் முதலமைச்சர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
Next Story