ஜல்லிக்கட்டு காளை சிலை திறப்பு - அச்சு, அசலான வடிவமைப்பு என முதலமைச்சர் புகழாரம்
காவிரி குண்டாறு திட்டத்தை தன் கையால், அடிக்கல் நாட்டி துவங்கி வைப்பேன் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
காவிரி குண்டாறு திட்டத்தை தன் கையால், அடிக்கல் நாட்டி துவங்கி வைப்பேன் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை அடுத்த விராலிமலைக்கு சென்ற அவர் அங்கு, ஜல்லிக்கட்டு காளை சிலையை திறந்து வைத்தார். காளை மற்றும் வீரர் இணைந்த ஏறு தழுவுதல் சிலை அச்சு அசலாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்த அமைச்சர் விஜயபாஸ்கருக்கும், சிற்பிக்கும் வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்தார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வீரர்கள், ஜல்லிக்கட்டில் சிறந்து விளங்குவதாகவும், நல்ல உடல்திறனோடு இருப்பதாகவும் ஜல்லிக்கட்டு வீரர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வானம்பார்த்த பூமியான புதுக்கோட்டையை வளமிக்க பூமியாக மாற்றப்படும் என்றார். இதற்காக, காவிரி - வைகை- குண்டாறு திட்டம் நிறைவேற்றபடும் என்ற அவர், நிலம் கையகம் நடந்து வருவதாகவும், விரைவில் கால்வாய் அமைக்கும் பணி தொடங்கும் என்றும் கூறினார். நானே நேரடியாக வந்து, என் கையாலேயே திட்டத்தை தொடங்கி வைப்பேன் என முதலமைச்சர் திட்டவட்டமாக கூறினார். அதன்போது, அங்கிருந்த மக்கள், கரவொலி எழுப்பி மகிழ்ச்சி தெரிவித்தனர்.
Next Story