"சக்ரா" படத்தை ஓடிடி- யில் வெளியிட தடை கோரிய வழக்கு - ரூ.4 கோடி உத்தரவாதத்தை, நடிகர் விஷால் செலுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

'ஆக்‌ஷன்' பட நஷ்டம் குறித்து விஷால் அளித்த உறுதிமொழியை நிறைவேற்றாததால், சக்ரா திரைப்படத்தை வெளியிட 4 கோடி ரூபாய்க்கான உத்தரவாதப் பத்திரம் தாக்கல் செய்ய விஷாலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சக்ரா படத்தை ஓடிடி- யில் வெளியிட தடை கோரிய வழக்கு - ரூ.4 கோடி உத்தரவாதத்தை, நடிகர் விஷால் செலுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
x
நடிகர் விஷால் - தமன்னா நடிப்பில் வெளியான ஆக்‌ஷன் என்ற படத்தை ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் ரவீந்திரன் தயாரித்திருந்தார். படத்தில் நஷ்டம் ஏற்பட்டால் 8 கோடியே 29 லட்சத்து 57 ஆயிரத்து 468 ரூபாயை திருப்பித்தருவதாக கூறி, டிரைடெண்ட் நிறுவனத்தின் ரவீந்திரனுடன் நடிகர் விஷால் உறுதி அளித்து ஒப்பந்தம் செய்திருந்தார். இந்நிலையில், சக்ரா படத்தை ஓடிடி- யில் வெளியிட தடை விதிக்கக் கோரி  ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. 
இந்த வழக்கு நீதிபதி ஆஷா முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, குறைந்தபட்ச உத்தரவாதம் அடிப்படையிலேயே ஒப்பந்தம் போடப்பட்டதாகவும், அதனால் வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என தெரிவிக்கப்பட்டது. பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், இரண்டு வாரத்தில் 4 கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தை விஷால் தாக்கல் செய்ய வேண்டுமெனவும், அவ்வாறு தாக்கல் செய்த பின்னர் சக்ரா படத்தை வெளியிட வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளார். படத்தை வெளியிட்ட இரண்டு வாரத்தில் மீதமுள்ள 4 கோடியே 29 லட்சத்து 57 ஆயிரத்து 648 ரூபாய்க்கான உத்தரவாதத்தை தாக்கல் செய்ய வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் மத்தியஸ்தர் உரிய முறையில் தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்தி, வழக்கை முடித்து வைத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்