சாக்கில் சுற்றி வீசப்பட்ட பச்சிளம் குழந்தை - அரசு மருத்துவமனையில் அனுமதி
தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே, பாலிதீன் சாக்கில் சுற்றி வீசப்பட்ட ஆண் குழந்தை மீட்கப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே, பாலிதீன் சாக்கில் சுற்றி வீசப்பட்ட ஆண் குழந்தை மீட்கப்பட்டுள்ளது. குழந்தையின் அழுகுரல் கேட்டு அங்குவந்த பெண்கள், குழந்தையை மீட்டு சுத்தம்செய்து பூதலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், பிறந்து 10 நாட்களே இருக்கும் என தெரிவித்தனர். சைல்டு லைனுக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து, தஞ்சை இராசா மிராசுதார் அரசு மருத்துவமனைக்கு குழந்தை கொண்டு செல்லப்பட்டது.
Next Story