சித்த மருத்துவம் தொடர்பாக எத்தனை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன? - விரிவான பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு

சித்த மருத்துவம் தொடர்பாக எத்தனை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன என்பது குறித்தும் என்னென்ன மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்பது குறித்தும் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
x
மதுரையைச் சேர்ந்த சித்த மருத்துவர் சுப்ரமணியன் தான் கண்டறிந்த,  66 மூலிகைகளைக் கொண்டு தயாரித்துள்ள IMPRO எனும் மருத்துவ பொடியை, வைராலஜி துறை நிபுணர்கள் பரிசோதித்து  முடிவுகளை அறிவிக்க கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி அமர்வு விசாரித்தது. அப்போது சித்த மருத்துவம் தொடர்பாக எத்தனை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும், கபசுரக் குடிநீர் இதுவரைக்கும் ஏன் கொரோனாவுக்கு மருந்து என அறிவிக்க வில்லை என்றும் சித்த மருத்துவத் துறையில் எத்தனை மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்பது குறித்து விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய ‌ மத்திய அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நவம்பர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்..மேலும்  நோய் எதிர்ப்பு மருந்தை கண்டுபிடிக்க பல கோடி ரூபாயை தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கி வரும் சூழலில்,  இது போன்ற சித்த மருந்துகளை ஊக்குவிக்கவைக்கலாமே என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்