யானை வழித்தடங்களில் விடுதி, உணவகம் கட்ட தடை தொடரும் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
நீலகிரி மாவட்டம், முதுமலை சரணாலயத்தை ஒட்டியுள்ள மசினகுடி கிராமத்தில் யானைகளின் வழித்தடங்களை ஆக்கிரமித்து விடுதி, உணவகங்கள் உள்ளிட்டவை கட்டுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

இதுதொடர்பான வழக்கில் கடந்த 2011-ஆம் சென்னை உயர்நீதிமன்றம், நீலகிரி மாவட்டத்தில் யானைகளின் வழித்தடங்களை ஆக்கிரமித்து விடுதி, உணவகங்கள் கட்ட தடை விதித்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடை தொடரும் என்றும், யானை வழித்தடங்களில் சட்ட விரோத கட்டுமானங்களை ஆய்வு செய்ய உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான 3 பேர் கொண்ட குழுவையும் நியமித்தது.
Next Story