"கடன் தள்ளிவைப்பு காலத்துக்கான கூட்டு வட்டி போடுவதைக் கைவிட வேண்டும்" - நிதியமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கோரிக்கை
கடன் தள்ளி வைப்பு காலத்திற்கான தவணைகள் மீது வட்டிக்கு வட்டி போடுவதைக் கைவிட வேண்டுமென்று மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
கடன் தள்ளி வைப்பு காலத்திற்கான தவணைகள் மீது வட்டிக்கு வட்டி போடுவதைக் கைவிட வேண்டுமென்று மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் வட்டிக்கு வட்டி போடுவது கொரோனா பேரிடரால் பெரும் துயருக்கு ஆளாகி இருக்கிற மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்று சுட்டிக்காட்டி உள்ளார். தற்போது உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டால் இக் கோரிக்கையை பரிசீலிக்க மத்திய அரசு முன் வந்திருப்பது கண்டு மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார். எல்லாக் கடன்களுக்கும் ஒரே வரம்பு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. எல்லா குறு சிறு நடுத்தர தொழில்களுக்கும் இத் தள்ளுபடி விரிவடைகிற வகையில் வரம்பு உயர்த்தப்பட வேண்டுமென சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.
Next Story