மெரினாவில் மக்களை அனுமதிக்கலாமா? - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில் மக்களை அனுமதிப்பது தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள முடிவு குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மீன் விற்பனை ஒழுங்குபடுத்துவது, நடைபாதை வியாபாரிகள் சட்டத்தை அமல்படுத்தவது குறித்து பீட்டர் ராயன் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, பல துறைகளில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், மெரினா கடற்கரையில் மக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனரா என கேள்வி எழுப்பினர். மேலும், இது அரசின் கொள்கை முடிவு என்பதால் இந்த விவகாரத்தில் நீதிமன்றம் அழுத்த தர முடியாது என்று குறிப்பிட்ட அவர்கள், மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில் மக்களை அனுமதிப்பது குறித்து அரசும், சென்னை மாநகராட்சியும் அக்டோபர் 5ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டனர். மெரினாவில் புதிய தள்ளவண்டி கடைகளுக்கான ஒப்பந்த பணி விவரங்கள் குறித்தும் அறிக்கை அளிக்க நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
Next Story