குட்கா உரிமை மீறல் நோட்டீஸ் எதிர்ப்பு வழக்கு - நாளை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு
குட்கா விவகாரத்தில் உரிமை மீறல் குழு மீண்டும் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து 18 எம்எல்.ஏக்கள் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் நாளை இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு குட்கா பொருட்களை சட்டமன்றத்துக்கு எடுத்து வந்து காண்பித்ததாக, தி.மு.க தலைவர் ஸ்டாலின் உள்பட 18 எம்.எல்.ஏக்களுக்கு உரிமை மீறல் குழு புதிய நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீஸை எதிர்த்து, ஸ்டாலின் உள்பட 18 எம்.எல்.ஏக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில், வழக்கு தொடர்ந்தனர். இந்த மனு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த அவர், குட்காவை காண்பித்தது உரிமை மீறல் இல்லை என முன்பு நடந்த விசாரணையில் தலைமை நீதிபதி அமர்வு பிறப்பித்த உத்தரவை சுட்டிக்காட்டினார். இந்த வழக்கில் நாளை இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறினார்.
Next Story