ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை உயிருடன் மீட்க கருவி - ஆறு விதமான கருவிகளை உருவாக்கிய மெக்கானிக்
ஆழ்துளை கிணறுகளில் தவறி விழும் குழந்தைகளை உயிருடன் மீட்க, 6 விதமான கருவிகளை உருவாக்கி மீட்பு நடவடிக்கைக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளார் நாகையை சேர்ந்த மெக்கானிக் ஒருவர்.
ஆழ்துளை கிணறுகளில் விழுந்த குழந்தையை மீட்பது குறித்து அறம் என்ற படத்தில் தத்ரூபதாக காட்சிப்படுத்தி இருப்பார் இயக்குநர் கோபிநயினார்.
திரைப்படத்தில் வரும் காட்சிகளை போல், ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்க, அரசு இயந்திரமே போராடியது, இன்றும் நம் கண்ணில் நிழலாடுகிறது. இந்த சம்பவம் தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.உலகில் எவ்வளவு தொழில்நுட்பம் இருந்தாலும், ஆழ்துளை கிணறுகளில் விழும் குழந்தைகளை மீட்க நவீன கருவிகள் இல்லை என்ற குறை இன்றளவும் இருந்து வருகின்றது. இந்த நிலையில் தான், நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை சேர்ந்த ஆட்டோ மெக்கானிக் நாகேந்திரன் என்பவர், ஆழ்துளை கிணறில் சிக்கிக்கொள்ளும் குழந்தைகளை உயிருடன் மீட்கும் ஆறு விதமான கருவிகளை உருவாக்கியுள்ளார். 20 ஆயிரம் ரூபாய் செலவில் தயாரித்துள்ள இந்த கருவி, ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தையின் அசைவுகளை கண்டறியும். அதற்காக அந்த கருவியின் அடிபாகத்தில் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. குழந்தைகள் நேராகவோ அல்லது தலைகீழாக விழுந்துவிட்டால் கூட, மீட்கும் வகையில் கருவிகளை உருவாக்கியுள்ளார், நாகேந்திரன். இந்த கருவிகளை கொண்டு சென்று உடனடியாக மீட்பு பணியை துரிதப்படுத்தினால், உயிருடன் குழந்தைகளை மீட்க முடியும் என கூறுகிறார்.
Next Story