நகரும் நியாய விலை கடை திட்டம் துவக்கம் - கொடியசைத்து துவக்கி வைத்தார் முதலமைச்சர்
அம்மா நகரும் நியாய விலை கடை திட்டத்தை தலைமை செயலகத்தில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
அம்மா நகரும் நியாய விலை கடை திட்டத்தை தலைமை செயலகத்தில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் 262 கடைகளும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 212 கடைகளும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 168 கடைகளும் செயல்படவுள்ளன,. 9 கோடியே 66 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டுள்ள 3 ஆயிரத்து 501 நகரும் அம்மா நியாய விலைக் கடைகள் மூலம் 5 லட்சத்து 36 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்கள் பயனடைவார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது,. மலைப் பாங்கான பகுதிகள் மற்றும் வனப் பகுதிகளுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் நகரும் நியாய விலைக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Next Story