நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் சிக்கிய இடைத்தரகர்கள் - ஓராண்டு ஆகியும் கைது செய்யாதது ஏன்?

கடந்த ஆண்டு நீட் தேர்வில் ஆள் மாறாட்ட வழக்கில் சிக்கியவர்களை இன்னமும் கைது செய்ய முடியாமல் சிபிசிஐடி போலீசார் திணறி வருகின்றனர்.
நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் சிக்கிய இடைத்தரகர்கள் - ஓராண்டு ஆகியும் கைது செய்யாதது ஏன்?
x
கடந்த ஆண்டு நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மாணவர்கள் முறைகேடாக தேர்ச்சி அடைந்து, மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதில் மாணவர்கள், பெற்றோர், இடைத்தரகர் என 12 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் ஆள்மாறாட்டம் செய்து எழுதிய 10 மாணவர்களின் புகைப்படத்தை சிபிசிஐடி போலீசார் கடந்த 6 மாதத்திற்கு முன் வெளியிட்டனர். ஆனால் தலைமறைவாக உள்ள அவர்களை தனிப்படை அமைத்து சிபிசிஐடி போலீசார் தேடி வந்தனர். இதில் முக்கிய இடைத்தரகராக செயல்பட்ட ரசீத் என்பவரும் தேடப்பட்டு வருகிறார். இதனிடையே இன்று நீட் தேர்வு நடைபெறும் ​நிலையில் கடந்த ஆண்டு நடந்த மோசடியில் யாரையும் கைது செய்ய முடியாமல் சிபிசிஐடி போலீசார் திணறி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்