கிஷான் திட்டத்தை போல அடுத்த மோசடி? - கழிப்பறை திட்டத்திலும் முறைகேடு புகார்
பிரதமரின் கிசான் திட்டத்தை போல அனைவருக்கும் கழிப்பறை திட்டத்திலும் ஆரணி பகுதியில் முறைகேடுகள் நடந்து இருப்பதாக பயனாளிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் ஆரணி கிழக்கு மற்றும் மேற்கு ஓன்றியங்களில், மத்திய அரசின் நிர்மல் பாரத் அபையான் திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு 12 ஆயிரம் ரூபாய் வீதம், ஒதுக்கப்பட்டது. இதில் வடுகசாத்து புதிய காலனி பகுதியில் அனைத்து கழிப்பறைகள் கட்டி முடித்துவிட்டதாக ஆரணி கிழக்கு ஒன்றிய அலுவலகத்தில் கணக்கு முடிக்கபட்டு ஓப்பந்ததாரருக்கு பணம் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் பணிகள் அனைத்தும் பல மாதங்களாக பாதியிலேயே நிறுத்தப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளதாக பயனாளிகள் புகார் தெரிவிக்கின்றனர். மத்திய அரசின் திட்டங்களை பயன்படுத்தி தொடரும் மோசடி புகார்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
Next Story