கட்சியில் இருந்து நீக்கியதை எதிர்த்து கு.க.செல்வம் வழக்கு - தி.மு.க. தலைவர், பொதுச் செயலாளருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

கட்சியில் இருந்து நீக்கியதை எதிர்த்து சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, தி.மு.க. தலைவர், பொதுச் செயலாளருக்கு சென்னை நகர உரிமையியல் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
x
கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக சட்டமன்ற உறுப்பினர், கு.க.செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கி, தி.மு.க. தலைமை, ஆகஸ்ட் 13 ஆம் தேதி உத்தரவிட்டது. இதனை எதிர்த்து கு.க.செல்வம், சென்னை நகர உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். தி.மு.க.வில் உறுப்பினரை கட்சியில் இருந்து நீக்க பொதுச் செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என தெரிவித்திருந்தார். மேலும், கட்சி அனுப்பிய நோட்டீசுக்கு விளக்கமளித்தும், எந்த விசாரணையும் நடத்தாமல், தன்னை கட்சியில் இருந்து நீக்கி உள்ளதாகவும் கு.க. செல்வம் மனுவில் தெரிவித்திருந்தார். மனுவை விசாரித்த 17வது நகர உரிமையியல் நீதிமன்றம், செப்டம்பர் 18-க்குள் பதிலளிக்க தி.மு.க. தலைவர், பொதுச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்