"தன்னிச்சையாக செயல்பட வேண்டாம்- போஸ்டர் ஒட்ட வேண்டாம்" - ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு உத்தரவு

தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் ரஜினி குறித்து அவரது ரசிகர்களால் திடீர் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
x
தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் ரஜினி குறித்து அவரது ரசிகர்களால் திடீர்  போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. ஆட்சி மாற்றம் அரசியல் மாற்றம் என்ற பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் 
தலைமையில் இருந்து ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு திடீரென 
வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தலைமை நிர்வாகி சுதாகர் பிறப்பித்த உத்தரவில், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தன்னிச்சையாக செயல்பட வேண்டாம் எனவும், போஸ்டர் ஒட்ட வேண்டாம் எனவும் கேட்டுக் 
கொள்ளப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்