அழிவின் விளிம்பில் பனை மரங்கள் - குளத்தில் அள்ளப்படும் மணலால் சாய்ந்து விழுந்து வரும் மரம்

நெல்லை மாவட்டம் பணகுடி சுற்றுவட்டார பகுதிகளில் அழிவின் விழும்பிற்கு பனை மரங்கள் தள்ளப்பட்டுள்ளன.
அழிவின் விளிம்பில் பனை மரங்கள் - குளத்தில் அள்ளப்படும் மணலால் சாய்ந்து விழுந்து வரும் மரம்
x
நெல்லை பணகுடியில் அதிக அளவில் பனைமரங்கள் இருந்ததால் அந்த இடம் பணகுடி என்று அழைக்கப்பட்டது. இந்நிலையில், இரண்டு வாரங்களுக்கு முன்பு பணகுடி பகுதியில் உள்ள குளங்களில் மண் எடுக்க அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து, குளத்தில் உள்ள பனை மரத்தை சுற்றி மண் அள்ளப்படுவதால், மணல் அள்ளப்பட்ட சில நாட்களிலேயே மரம் சாய்ந்து அழிந்து வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அழிவின் விளிம்பிற்கு தள்ளப்பட்டுள்ள கற்பக விருட்சமாக கருதப்படும் பனை மரங்கள் காக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்