3 மாத ஊதியம் வழங்காத ஆவடி மாநகராட்சி - சாலை மறியலில் ஈடுபட்ட கொரோனா களப்பணியாளர்கள்

ஆவடி மாநகராட்சி பகுதியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் முன்களப் பணியாளர்கள் 300 பேருக்கு 3 மாதமாக ஊதியம் வழங்கவில்லை என கூறப்படுகிறது.
3 மாத ஊதியம் வழங்காத ஆவடி மாநகராட்சி - சாலை மறியலில் ஈடுபட்ட கொரோனா களப்பணியாளர்கள்
x
ஆவடி மாநகராட்சி பகுதியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் முன்களப் பணியாளர்கள் 300 பேருக்கு 3 மாதமாக ஊதியம் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து பலமுறை முறையிட்டும் மாநகராட்சி தரப்பில் எந்த ஒரு பதிலும் வராத  நிலையில் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு களப் பணியாளர்கள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் இன்று நூற்றுக்கும் மேற்பட்ட களப் பணியாளர்கள் ஆவடியில் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு உருவானது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட களப் பணியாளர்களுடன் மாநகராட்சி ஆணையர் மற்றும் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்