108 ஆம்புலன்ஸ் வராததால் நோயாளி பலி - உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

ராணிப்பேட்டை மாவட்டம் நவல்பூரை சேர்ந்த விஜயன் என்பவர் மூச்சுத்திணறல் காரணமாக வாலாஜாபேட்டை தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
108 ஆம்புலன்ஸ் வராததால் நோயாளி பலி - உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
x
ராணிப்பேட்டை மாவட்டம் நவல்பூரை  சேர்ந்த விஜயன் என்பவர் மூச்சுத்திணறல் காரணமாக வாலாஜாபேட்டை தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர், இதனையடுத்து அவரை அழைத்து செல்ல தகவல் தெரிவித்து 3 மணி நேரம் கழித்து 108 ஆம்புலன்ஸ் வந்ததால் விஜயன்  வாலாஜாபேட்டை தலைமை அரசு மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.  இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் விஜயனின் உடலைப் பெற மறுத்து மருத்துவமனை வளாகத்திலேயே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் நடத்திய பேச்சு வார்த்தைக்கு பின் அவர்கள் கலைந்து சென்றனர்

Next Story

மேலும் செய்திகள்