தரமற்ற சாலை அமைப்பதாக பொதுமக்கள் புகார்- அதிகாரிகள் ஆய்வு செய்ய வலியுறுத்தல்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே தரமற்ற சாலையை அமைத்த ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே தரமற்ற சாலையை அமைத்த ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர். முன்னதாக அரட்டவாடி முதல் அரியாகுஞ்சூர் வரைரூபாய் 37 லட்சத்தில் தார் சாலை அமைத்திட ஆணை பிறப்பித்து.அதற்கான பணிகளை ஒப்பந்ததாரர் சங்கர் மாதவன் என்பவர், இரு தினங்களுக்கு முன்னர் மேற்கொண்டுள்ளார். ஆனால், தரமற்ற முறையில் சாலை அமைத்துள்ளதால், கையால் பெயர்த்தாலே கற்கள் பெயர்ந்துவிடும் நிலையில் சாலை உள்ளது. எனவே சம்மந்தபட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
Next Story