சொத்து தகராறு - சரமாரி தாக்கிய தம்பி குடும்பத்தினர்
பழனி அருகே சொத்து பிரச்சினையில் அண்ணன் குடும்பத்தினரை தம்பி குடும்பத்தினர் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பழனி அருகே சொத்து பிரச்சினையில் அண்ணன் குடும்பத்தினரை தம்பி குடும்பத்தினர் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த பாப்பம்பட்டியைச் சேர்ந்த சகோதரர்கள் கந்தசாமி, முருகவேல் ஆகியோர் ஒரே இடத்தில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சொத்துப் பிரச்சினை தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது கந்தசாமியின் வீட்டுக்குள் நுழைந்த சகோதரர் முருகவேல் அவரது மனைவி ஈஸ்வரி, மகன்கள் மாரிமுத்து, மகேந்திரன் ஆகியோர் அங்கிருந்த பொருட்களை அள்ளி வீசியதுடன் பேத்திகளையும் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story