ஆம்புலன்ஸ் உதிரிபாகங்களை உயரதிகாரிகள் விற்பதாக புகார் - தொடர் போராட்டம் செய்ய ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் முடிவு
தொடர்போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களின் திடீர் அறிவிப்பு புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கரூர் மாவட்டம் வெள்ளையனை பகுதியில் 108 ஆம்புலன்ஸ் ரேடியேட்டரை மேல்அதிகாரி விற்றதாக ஓட்டுநர் புகாரளித்துள்ளார். அவரை சென்னைக்கு விசாரணைக்கு அழைத்த நிலையில் போக்குவரத்து இல்லாததால் வர இயலவில்லை என கடிதம் மூலம் விளக்கத்துள்ளார். ஆனால் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என 6 பேரை பணியிடை நீக்கம் செய்துள்ளது நிர்வாகம். இதைக்கண்டித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் சங்கத்தினர் 60 பேரை போலியாக பணியிடை நீக்கி உள்ளதாகவும் அரசு தலையிடாவிட்டால் தொடர் போராட்டம் நடத்தவுள்ளதாகவும் கூறினர்.
Next Story