காவலர் சுப்பிரமணியன் மரணம் : "எதிர்க்கட்சிகள் வாய்திறக்காதது ஏன் ?" - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
தூத்துக்குடியில் ரவுடியை பிடிக்கச்சென்றபோது உயிரிழந்த காவலர் சுப்பிரமணியன் மரணம் குறித்து எதிர்க்கட்சிகள் வாய் திறக்காதது ஏன்? என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தூத்துக்குடியில் ரவுடியை பிடிக்கச்சென்றபோது உயிரிழந்த காவலர் சுப்பிரமணியன் மரணம் குறித்து எதிர்க்கட்சிகள் வாய் திறக்காதது ஏன்?
என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ரவுடிகளால் போலீசார் தாக்கப்படும் சம்பவங்கள் வருத்தம் அளிப்பதாக உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. ரவுடிகளையும், சமூக விரோதிகளையும் ஒழிக்க கடுமையான சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று தெரிவித்த நீதிபதிகள், காவலர் உயிர் மட்டும் எதிர்க்கட்சிகளுக்கு உயிராக தெரியவில்லையா என்று கேள்வி எழுப்பினர். ரவுடிகள் இறக்க நேரிடும் போது காட்டும் அக்கறையை காவல்துறை மீது ஏன் காட்டுவதில்லை என்றும் மனித உரிமை ஆணையத்துக்கும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தமிழகத்தின் செயல்பட்டு வரும் பல்வேறு ரவுடி குழுக்கள் குறித்த விவரங்களையும், அவர்களை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்தும் தமிழக டிஜிபி விளக்கமளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Next Story