ஊரடங்கால் வருமானம் பாதிப்பு - லாரி உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த பரமேஸ்வரன் என்பவர் சொந்தமாக லாரி வைத்திருந்த நிலையில் அதன் மூலம் வெளிமாநிலங்களுக்கு சரக்குகளை அனுப்பி வந்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த பரமேஸ்வரன் என்பவர் சொந்தமாக லாரி வைத்திருந்த நிலையில் அதன் மூலம் வெளிமாநிலங்களுக்கு சரக்குகளை அனுப்பி வந்துள்ளார். ஊரடங்கு காரணமாக போதிய வருமானம் இல்லாத காரணத்தால் லாரிக்கு தவணை செலுத்த முடியாமல் தவித்து வந்த அவர், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. மேலும் பரமேஸ்வரன் தற்கொலை செய்வதற்கு முன் எழுதியுள்ள கடிதத்தில் தனது சாவுக்கு யாரும் காரணமில்லை எனவும், தனது இரு சக்கர வாகனத்தை அண்ணிடம் ஒப்படைந்து விடுங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார், கடிதத்தை கைப்பற்றிய காவல் துறையினர் தற்கொலைக்கான காரணம் குறித்து உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story