கொரோனா ஊடங்கால் 67 % குடும்பங்கள் வருவாய் இழந்து தவிப்பு - ஆய்வில் அதிர்ச்சி தகவல்

கொரோனா ஊரடங்கால் தமிழகத்தில் 67 சதவீத குடும்பங்கள் வருவாய் இழந்து தவித்து வருவது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கொரோனா ஊடங்கால் 67 % குடும்பங்கள் வருவாய் இழந்து தவிப்பு  - ஆய்வில் அதிர்ச்சி தகவல்
x
தமிழக அரசின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை, சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து நடத்திய ஆய்வில், தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காலத்தி​ல் 53 சதவீத குடும்பங்களில் வேலை இழப்பு ஏற்பட்டு உள்ளதாக தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் 10 ஆயிரத்து 31 குடும்பங்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உள்ளது. கிராமப்புறங்களில் இது  56 சதவீதமாகவும்,  நகர்புறங்களில் 50 சதவீதமாகவும் உள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது. இந்த காலத்தில் குடும்பத்தில் ஒரு நபருக்காவது வேலை இழப்பு ஏற்பட்டு உள்ளது என்றும், வேலையிழப்பை சந்தித்துள்ள குடும்பங்களில் 83.4 சதவீதத்தினர், தினக்கூலி பணியாளர்கள் என்றும், 13.3 சதவீதத்தினர் தனியார்  நிறுவனங்களில் மாத சம்பளம் பெறும் பணியாளர்கள் என்றும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. கோவை  மாவட்டத்தில் மிகக் குறைந்த அளவில் 38 சதவீத குடும்பங்களில் வேலையிழப்பு ஏறப்பட்டுள்ளது. அதேநேரத்தில், விருதுநகர் மாவட்டத்தில் மிக அதிகமாக 67 சதவீத குடும்பங்களில்  வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது என்றும், தமிழகம் முழுவதும் 67 சதவீத குடும்பங்கள் வருவாய் இழப்பை எதிர்கொண்டு உள்ளதாக அந்த ஆய்வு சுட்டிக்காட்டி உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்