3 வயது சிறுவன் மீது விழுந்த தொலைக்காட்சி பெட்டி - மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் சிறுவன் உயிரிழப்பு

சென்னை தாம்பரம் அருகே 3 வயது சிறுவன் மீது தொலைகாட்சி பெட்டி தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
3 வயது சிறுவன் மீது விழுந்த தொலைக்காட்சி பெட்டி - மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் சிறுவன் உயிரிழப்பு
x
அன்னை சத்யா நகரை சேர்ந்த பாலாஜி என்பவரது மகன் கவியரசு நேற்று இரவு அலமாரியில் இருந்த  தொலைகாட்சி பெட்டி மேல்  இருந்த செல்போனை  எடுக்க முயன்றுள்ளார். அப்போது நிலை தடுமாறி தொலைகாட்சி பெட்டி சிறுவனின் தலையில் விழுந்தது. சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆம்பலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர் . இதனையடுத்து உடலை கைப்பற்றிய சேலையூர் போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Next Story

மேலும் செய்திகள்