மேட்டூர் கிழக்கு, மேற்கு கால்வாயில் தண்ணீர் திறப்பு - மலர்கள் தூவி தண்ணீரை திறந்து விட்ட அமைச்சர்கள்
மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, கருப்பணன் மற்றும் சரோஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டு, மலர் தூவி தண்ணீரை திறந்து வைத்தனர். மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகரன், மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏ செம்மலை மற்றும் மாவட்ட ஆட்சியர் ராமன், சேலம் மாவட்ட எஸ்.பி தீபா கணிகர் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். கொரோனா அச்சம் காரணமாக சமூக இடைவெளியுடன், இந்த விழா நடைபெற்றது.
56வது ஆண்டாக கால்வாயில் நீர் திறப்பு - 45,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்
மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு மற்றும் மேற்கு கால்வாயில், 56 ஆவது ஆண்டாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டத்தில் உள்ள 45 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது முதற்கட்டமாக 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாகவும், பாசன தேவைக்கு ஏற்ப கூடுதலாக தண்ணீர் திறக்கப்படும் என்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story