இ பாஸ் நடைமுறையில் தளர்வுகள் - தமிழக அரசு அறிவிப்பு

விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ பாஸ் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
x
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பொதுமக்கள் முக்கியமான பணிகளுக்கு தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க வரும் 17 ஆம் தேதி முதல் ஆதார் அல்லது குடும்ப அட்டை மற்றும் தொலைபேசி எண்ணுடன் விண்ணப்பித்தால் தாமதமின்றி அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அதே நேரம், தேவையற்ற பயணத்தை தவிர்த்து, தவிர்க்க இயலாத பணிகளுக்கு மட்டும் இ பாஸ் 
விண்ணப்பம் செய்து பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கவும், அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்கவும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்த நிலையில் இ பாஸ் நடைமுறையில் தளர்வுகளை வழங்கி முதலமைச்சர் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்