மோதலை தடுக்க எஸ்.ஐ. துப்பாக்கியால் சுட்ட விவகாரம் - விசாரணை அறிக்கை உள்துறை செயலாளருக்கு அனுப்பி வைப்பு
புதுக்கோட்டை மாவட்டம் போசம்பட்டியில் இருபிரிவினரிடையே நடந்த மோதலை தடுக்க உதவி ஆய்வாளர் சரவணன் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.
புதுக்கோட்டை மாவட்டம் போசம்பட்டியில் இருபிரிவினரிடையே நடந்த மோதலை தடுக்க உதவி ஆய்வாளர் சரவணன் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இந்த சம்பவம் தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் பாலதண்டாயுதபாணி விசாரணை நடத்தி அந்த அறிக்கையை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரியிடம் சமர்ப்பித்தார். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி அந்த அறிக்கையை தமிழக உள்துறைச் செயலாளருக்கு அனுப்பியுள்ளார். அறிக்கையை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து தெரியவரும்
Next Story