ஒ.பி.சி. இட ஒதுக்கீடு தீர்ப்பு - முதலமைச்சர் வரவேற்பு
மருத்துவ படிப்பில் ஓ.பி.சி. பிரிவினருக்கான இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மருத்துவ படிப்பில் ஓ.பி.சி. பிரிவினருக்கான இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சமூகநீதி காத்த ஜெயலலிதாவின் வழியில் பணியாற்றும் அதிமுக அரசு எடுத்த சட்ட ரீதியான நடவடிக்கையினால், உயர்நீதிமன்றம் இந்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கயுள்ளதாகவும், தனது சமூக வலைதள பதிவில் அவர் கூறியுள்ளார்.
ஓ.பி.சி. இடஒதுக்கீடு தீர்ப்பு - துணை முதல்வர் வரவேற்பு
ஓ.பி.சி. இட ஒதுக்கீடு வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை மகிழ்ச்சியுடன் வரவேற்பதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சட்ட போராட்டத்தின் மூலம் வெற்றி பெற தமிழக அரசிற்கு துணை நின்ற அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்வதாகவும், தனது சமூக வலைதள பதிவில் அவர் கூறியுள்ளார்.
Next Story