"மானம்கெட்ட உலகில் வாழ விருப்பமில்லை" - பேஸ்புக் நேரலையில் இளைஞர் தற்கொலை
திருப்பூரில் தனது பேஸ்புக் கணக்கில் நேரலை செய்து ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
தாராபுரத்தை சேர்ந்த ராம்குமார் தனியார் நிறுவனத்தில் ஓட்டுநகராக வேலை பார்த்து வந்துள்ளார். தாராபுரத்தில் உள்ள தனது தந்தைக்கு போன் மூலம் அழைத்த ராம்குமார் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் தனது மகனை பத்திரமாக பார்த்துக்கொள் என சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்துள்ளார். வீட்டில் மனைவி இல்லாத நேரத்தில், தனது பேஸ்புக் கணக்கில் நேரலை செய்து ராம்குமார் தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த போலீசார் ராம்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன், அவர் கைப்பட எழுதிய வைத்திருந்த தற்கொலை குறிப்பை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். அதில், மானங்கொட்ட உலகில் வாழ விருப்பமில்லை என ராம்குமார் குறிப்பிட்டுள்ளார்.
Next Story