குளச்சல் ஏஎஸ்பிக்கு கொரோனா தொற்று - மருத்துவமனையில் அனுமதி
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் ஏஎஸ்பி விஷ்வேஷ் சாஸ்திரிக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் ஏஎஸ்பி விஷ்வேஷ் சாஸ்திரிக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மேற்கொண்ட ஆய்வின்போது இவரும் இவரது மனைவியான பத்மநாபபுரம் துணை ஆட்சியரான சரண்யாவும் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி-க்கு கொரோனா
செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணனுக்கு கொரனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருடன் காணொலி வாயிலாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அவர் பங்கேற்றார். அதன் பிறகு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவருக்கு, கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, காட்டாங் கொளத்தூர் அருகே பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கண்ணன் சிகிச்சை பெற்று வருகிறார்
கொரோனாவில் இருந்து மீண்டார் கோவை ஆட்சியர் - விரைவில் களப்பணிக்கு திரும்புவார் என நம்பிக்கை
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கோவை மாவட்ட ஆட்சியர் இராசமணி குணமடைந்து வீடு திரும்பினார். கடந்த 15 ஆம் தேதி அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். அடுத்த 5 நாட்களுக்கு மருத்துவர் ஆலோசனைபடி தனிமைபடுத்தி கொள்ள உள்ளதாகவும், ஒருவார காலத்தில் மீண்டும் களப்பணிக்கு திரும்புவார் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்

Next Story